TNPSC Thervupettagam

சீனாவின் வங்கிக்கு இந்தியா இசைவு

July 15 , 2018 2185 days 658 0
  • சீன அரசாங்கத்தினுடைய  கடன் அளிக்கும் மிகப்பெரிய நான்கு வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் சீனா வங்கியானது இந்தியாவில் தனது கிளைகளைத் திறக்க மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கொள்கையளவில் ஒப்புதல் பெற்றுள்ளது.
  • பெய்ஜிங்கைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் இந்த கடன் அளிக்கும் வங்கியானது 51 நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டிருக்கிறது.
  • வங்கிகளை மேற்பார்வையிடும் பேசல் குழுவினால் (Basel Committee) உலகளவில் முறையாக இயங்கும் முக்கியமான வங்கி என்று வகைபடுத்தப்பட்டுள்ளது. (Global systematically Important Bank)
  • சீனாவின் மற்றொரு கடன் அளிக்கும் வங்கியான இண்டஸ்டிரியல் மற்றும் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா வங்கி இந்தியாவில் கிளையைக் கொண்டுள்ளது. இந்த வங்கி தவிர 44 வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் கிளையைக் கொண்டுள்ளன.
  • முற்றிலும் முழுமையாக துணை நிறுவன வழியின் மூலம் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் உள்நாட்டு வங்கிகளுக்கு இணையாக நடத்தப்படுவார்கள் என்றும், கிளையைத் தொடங்க உரிமம் பெறுவது தாராளமாக்கப்படும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.
  • கிளைகள் மூலமாக செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் ஒவ்வொரு கிளையைத் தொடங்க மத்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்