மக்கள் விடுதலை இராணுவம் (PLA) எனப்படும் சீன இராணுவம் ஆனது தைவான் தீவு தேசத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ‘அனகோண்டா உத்தியைப்’ பயன்படுத்துகிறது என்று தைவான் சமீபத்தில் கூறியது.
சீனா "மெதுவாக, ஆனால் நிச்சயமாக" தைவானைச் சுற்றி தனது இராணுவ இருப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது.
'அனகோண்டா உத்தி' என்பது அமெரிக்க உள்நாட்டுப் போரின் ஆரம்பக் கட்டங்களில் அமெரிக்க ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்காட் என்பவரால் முன்மொழியப்பட்ட ஒரு ராணுவ உத்தியைக் குறிக்கிறது.
இந்த உத்தியின் முதன்மை நோக்கம் ஆனது, ஓர் அனகோண்டா பாம்பு எப்படிச் சுழன்று அதன் இரையை பெருமளவு மூச்சுத் திணறச் செய்கிறதோ அது போலவே, ஒரு கூட்டமைப்பை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மூச்சுத் திணறச் செய்வதாகும்.
தைவானைச் சுற்றி சீனா இயக்கும் கப்பல்களின் எண்ணிக்கையில் மிக நிலையான அதிகரிப்பு உள்ளது என்ற நிலையிள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 142 ஆக இருந்த இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 282 ஆக இருந்தது.