ஏப்ரல்-நவம்பர் மாத காலங்களில் (எட்டு மாதங்கள்) சுமார் 24.75 மில்லியன் டன்கள் (mt) ஏற்றுமதி செய்யப்பட்டு, இந்தியாவில் இருந்து அதிக இரும்புத் தாது வாங்கும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில் முழு எண் அளவில் சீனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஏற்றுமதியாகும் என்பதோடு, இது 2020 ஆம் நிதியாண்டிற்குப் பிறகு மேற் கொள்ளப் பட்ட இரண்டாவது அதிகபட்ச ஏற்றுமதியாகும்.
இதுவரை, இந்த நிதியாண்டில் பதிவான இந்தியாவின் இரும்புத் தாது ஏற்றுமதியில் சுமார் 95 சதவீதம் சீனாவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2020 ஆம் நிதியாண்டின் 8 மாதங்களுக்கான 18.15 மில்லியன் டன் ஏற்றுமதி அல்லது மொத்த ஏற்றுமதியில் 76 சதவீதம் ஆனது, 2021 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட 35.19 மில்லியன் டன்கள் என்ற அளவில் 92 சதவீதமாக உயர்ந்த நிலையில் இது முழு எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும்.