COVID-19 பெருந்தொற்றினை ஏற்படுத்திய வைரஸைப் போன்ற HKU5-CoV-2 என்ற ஒரு புதிதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட வௌவால் கொரோனா வைரஸ் சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அங்குள்ள வுஹான் நிறுவனத்தில் கொரோனா வைரஸ்கள் குறித்து மேற்கொள்ளப் பட்ட மிக விரிவான ஆராய்ச்சிக்காக இது பெரும்பாலும் "பேட்வுமன்" என்று குறிப்பிடப் படுகிறது.
HKU5-CoV-2 என்பது மெர்பெகோவைரஸ் என்ற துணை இனத்தைச் சேர்ந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வௌவால் கொரோனா வைரஸ் ஆகும்.
மத்தியக் கிழக்கு சுவாச நோய்க்குறிக்கு (MERS) மிகவும் காரணமான வைரஸும் இதில் அடங்கும்.
இந்த வைரசானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவுவதற்கான சாத்தியமான ஆபத்து குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதியாகக் கண்டறியவில்லை.