TNPSC Thervupettagam

சீனாவில் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப தாழ்வாரம்

May 31 , 2018 2241 days 701 0
  • சீனாவின் வளர்ந்து வரும் மென்பொருள் சந்தையில் ஆதாயம் திரட்டிட தமது இரண்டாவது தகவல் தொழில்நுட்ப தாழ்வாரத்தை (information Technology Corridor) தென் மேற்கு சீனாவில் உள்ள குயியாங் மாகாணத்தில் இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் விழிப்பாக இருந்த போதிலும் சீனாவின் மென்பொருள் சந்தை நழுவிக் கொண்டே வருகின்றது.
  • மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான தேசிய அமைப்பு (National Association of Software and Services Companies - NASSCOM) சீனாவில் இரண்டாவது எண்ணியல் கூட்டுறவு வாய்ப்புகளுக்கான மையத்தை (Digital Collaborative opportunities Plaza - SIDCOP) ஏற்படுத்தியுள்ளது.
  • இது சீனாவின் மிகப்பெரும் சந்தைக்குள் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஊடுருவுதலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தும்.
  • கடந்த டிசம்பர் மாதம், நாஸ்காம் அமைப்பு சீனாவின் துறைமுக நகரமான டாலியன் நகரத்தில் இந்தியாவின் முதல் தகவல் தொழில் நுட்ப மையமான முதல் SIDCOP மையத்தை அங்கு ஏற்படுத்தியது.
  • டாலியன் தாழ்வாரத்தின் கவனம் இணைய விவகாரங்கள் (Internet of Things - IOT) மீது உள்ள அதே சமயம் குயியாங் தாழ்வாரம் பெருந்தகவல் விவகாரங்கள் (Big Data) மீது கவனம் செலுத்தும்.
  • இந்தியா சீனாவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக, கடந்த பல ஆண்டுகளாக இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மருந்தியல் நிறுவனங்களுக்கு சீனாவிற்குள்ளேயான சந்தை அனுமதியை சீனாவிடம் கேட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்