TNPSC Thervupettagam

சீனாவில் ஜுராசிக் கால புதைபடிவம் கண்டுபிடிப்பு

February 18 , 2025 5 days 37 0
  • சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானதாகக் கருதப்படும் குட்டை வால் பறவையின் புதைபடிவம் ஆனது கிழக்கு சீனாவில் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
  • இந்தப் பறவையின் குறுகிய வாலானது பைகோஸ்டைல் எனப்படும் கூட்டு எலும்பில் முடிவடைகிறது என்பது நவீன பறவைகளில் காணப்படும் ஒரு தனித்துவமான அம்சம் ஆகும்.
  • இது நவீனப் பறவைகளின் உடல் அமைப்பானது, முன்னர் கருதப் பட்டதை விட சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக ஜுராசிக் காலத்தின் ஒரு பிற்பகுதியில் தோன்றியது என்பதைக் குறிக்கிறது.
  • இது பறவைகள் முன்பு கணிக்கப்பட்டதை விட முன்னதாகவே தோன்றியிருக்கலாம் என்பதை அறிவுறுத்துகிறது.
  • ஆரம்ப காலப் பறவைகளின் தோற்றம் ஆனது, இன்னும் முன்னதாகவே, சாத்தியமாக 172 மில்லியன் முதல் 164 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்