சீனாவில் புதியத் திருமணங்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 6.1 மில்லியன் தம்பதிகள் மட்டுமே தங்கள் திருமணங்களைப் பதிவு செய்தனர் என்ற ஒரு நிலையில் இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 20.5% சரிவு ஆகும்.
இது 1986 ஆம் ஆண்டில் அமைச்சகம் ஆனது, அத்தகையத் தரவுகளை வெளியிடத் தொடங்கியதிலிருந்து பதிவாகிய மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
கடந்த ஆண்டு பதிவான திருமணங்களின் எண்ணிக்கையானது, 2013 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக பதிவான 13 மில்லியனில் பாதிக்கும் குறைவாகவே இருந்தது.
அதே நேரத்தில், சுமார் 2.6 மில்லியன் இணையர்கள் விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளதுடன் இது சற்று அதிகரித்த நிலையில் இது அதற்கு முந்தைய ஆண்டை விட 28,000 அதிகமாகும்.
கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் ஆனது, சிறிய அளவில் அதிகரித்த போதிலும், சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
வேலைவாய்ப்பினைப் பெறும் வயதுடைய மக்கள் தொகை (16 முதல் 59 வயது வரை) 2024 ஆம் ஆண்டில் 6.83 மில்லியன் குறைந்துள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது மக்கள் தொகையில் 22% பங்குடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.