சீனாவில் வெப்பம் மிகுந்த ஆகஸ்ட் மாதம்
September 13 , 2022
677 days
385
- வெப்பப் பதிவு முறைகள் தொடங்கியதில் இருந்து, சீன நாட்டில் ஆகஸ்ட் மாதமானது வெப்பம் மிகுந்த மாதமாகப் பதிவாகியுள்ளது.
- கடந்த மாதம் தெற்கு சீனாவில் ஏற்பட்ட வெப்ப அலை உலக வரலாற்றில் மிக மோசமான வெப்ப அலைகளில் ஒன்றாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
- சிச்சுவான் மாகாணம் மற்றும் சோங்கிங் நகரின் சில பகுதிகளில், சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலையானது பதிவாகியுள்ளது.
- ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் சராசரி வெப்பநிலை 22.4C ஆக இருந்தது.
- இது வழக்கத்தை விட 1.2 செல்ஸியஸ் அதிகமாக உள்ளது.
- இந்த மாதமானது, சீனாவின் மூன்றாவது வறண்ட ஆகஸ்ட் மாதம் ஆகும்.
- தற்போது பதிவான சராசரி மழைப் பொழிவானது வழக்கத்தை விட 23.1 சதவீதம் குறைவாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-723.jpg)
Post Views:
385