TNPSC Thervupettagam

சீர் மரபினர் சமூகங்களுக்கான ஒற்றைச் சான்றிதழ்

March 19 , 2024 122 days 263 0
  • சீர் மரபினர் சமூகங்கள் மற்றும் சீர் மரபினப் பழங்குடியினருக்கு வழங்கப்படும் தனித்தனிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் ஆக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது குற்றப் பரம்பரைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ‘சீர் மரபினர்’ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டனர்.
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
  • மாநில அரசு இடஒதுக்கீட்டினைப் பெறும் 68 சமூகங்கள் சீர் மரபினர் சமூகங்களாக வகைப்படுத்தப்பட்டன.
  • ஆனால் மத்திய அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக, அக்குழுவினர் சீர் மரபினப் பழங்குடியினர் என வகைப்படுத்தப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்