மத்திய அரசானது, சீர்மிகு நகரத் திட்டத்தினை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது.
ஜூன் மாத இறுதிக்குள் சீர்மிகு நகரத் திட்டப் பணியை நிறைவு செய்வதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு சீர்மிகு நகரத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தியக் குடிமக்களுக்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் நாகரீகமான வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகரங்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.