375 வருட கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இறுதியாக சீலாண்டியா எனப்படும் "காணாமல் போன" கண்டம் இன்னும் இருப்பதை அறிவியலாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
இந்தக் கண்டமானது, சுமார் 1.89 மில்லியன் சதுர மைல் அளவு கொண்டது.
இது முன்னொரு காலத்தில் கோண்ட்வானா என்ற பண்டையக் கால மாபெரும் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இது 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு அண்டார்டிகா மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியதாக இருந்தது.
சுமார் 105 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோண்ட்வானாவிலிருந்து சீலாண்டியா "நகரத்" தொடங்கியது.
சீலாண்டியா இருப்பது குறித்து முதன்முதலில் 1642 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்டது.
இந்த "புதிய" கண்டத்தின் பெரும்பகுதியானது 6,560 அடி (2 கிமீ) ஆழத்தில் நீருக்கடியில் அமைந்துள்ளது.
சீலாண்டியா தற்போது உலகின் எட்டாவது கண்டமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.