சுகன்யா சம்ரிதி திட்டத்தின் ஒட்டுமொத்த பதிவு செய்தலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்திட்டமானது மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான முதன்மை சேமிப்புத் திட்டமாகும்.
இது கடந்த 3 ஆண்டுகளில்95 லட்சம் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து 2940 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இது ஜூன் 2018 வரை கிடைத்த புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது.