TNPSC Thervupettagam

சுகாதார நல வசதிகளில் WASH சேவையின் முன்னேற்றம் 2000-2021

September 5 , 2022 687 days 404 0
  • UNICEF மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து WASH சேவை குறித்த (தண்ணீர், துப்புரவு மற்றும் ஆரோக்கியம்) முன்னேற்றத்தைக் காண்பதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டன.
  • உலகில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதார மையங்களில் அடிப்படை சுகாதாரச் சேவைகள் இல்லாததால் கிட்டத்தட்ட 4 பில்லியன் மக்கள் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள், 46 குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுவான அடிப்படை WASH சேவைகளை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான செலவில் பெற முடியும்.
  • இந்தியாவில் 38 சதவீத மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மட்டுமே அடிப்படை சுகாதார வசதிகள் உள்ளன.
  • உலக சராசரியை விட இந்தியாவில் 12 சதவீதம் குறைவான அடிப்படை சுகாதார வசதிகளே உள்ளன.
  • அரசு சாரா சுகாதார நிறுவனங்கள் இந்த அம்சத்தில் தெளிவான கண்காணிப்பினைக் கொண்டுள்ளன.
  • அரசு நிறுவனங்களில் உள்ள 32 சதவீத வசதிகளுடன் ஒப்பிடுகையில், 69 சதவீத வசதிகளுடன் தனியார் அடிப்படைச் சுகாதார அமைப்புகள் சிறப்பானச் சேவையைக் கொண்டுள்ளன.
  • சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான தண்ணீர் கிடைப்பதில் கிராமப்புறம்-நகர்ப் புறம் என்ற வேறுபாடு இருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
  • 90 சதவீத நகர்ப்புற சுகாதார மையங்கள் பாதுகாப்பான தண்ணீரை வழங்குகின்ற அதே நேரத்தில் கிராமப்புறங்களில் 10 சதவீத மையங்கள் மட்டுமே இந்த வசதியை வழங்கச் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்