TNPSC Thervupettagam

சுகாதார நலன் சார் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் பற்றிய வழிகாட்டுதல்

January 26 , 2024 304 days 236 0
  • சுகாதார நலன் சார் செயற்கை நுண்ணறிவின், குறிப்பாக ChatGPT போன்ற பன்முக செயற்கை நுண்ணறிவிற்கான நெறிமுறைகள் மற்றும் ஆளுகைக்கான வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்கள், குறிப்பாகச் சுகாதார நலன் சார்ந்த துறைகளில் அவற்றின் பயன்பாடுகளில், ஆக்கப்பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றச் சூழலில் ஏற்படும் நெறிமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்கின்றன.
  • உலக சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டுதல்கள் ஆனது, சுகாதார நலன் சார்ந்த துறைகளுக்கான பெரிய பன்முக மாதிரிகளின் (LMMs) ஐந்து பரந்த பயன்பாடுகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது:
    • நோயறிதல் மற்றும் நோயாளிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்ற மருத்துவ நல சேவை
    • நோய் அறிகுறிகள் மற்றும் நோய்க்கான சிகிச்சையை ஆராயச் செய்வது போன்றவற்றிற்காக நோயாளிகளுக்கான வழிகாட்டுதலுடன் கூடிய பயன்பாடு
    • மின்னணு சுகாதார தகவல் பதிவுகளுக்குள் நோயாளிகளின் வருகைகளை ஆவணப் படுத்துதல் மற்றும் தொகுத்தல் போன்ற எழுத்தர் மற்றும் நிர்வாகப் பணிகள்
    • பயிற்சி பெறுபவர்களுக்கு உருவகப்படுத்தப்பட்ட நோயாளிகளின் சந்திப்புகளை வழங்குதல் உள்ளிட்ட மருத்துவ மற்றும் செவிலியர் கல்வி
    • புதிய சேர்மங்களை அடையாளம் கண்டறிவது உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உருவாக்கம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்