TNPSC Thervupettagam

சுகாதார நிறுவனங்களின் தரவரிசைகள்

December 6 , 2022 594 days 372 0
  • தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையானது, அரசிற்குச் சொந்தமான சுகாதார நிறுவனங்களைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • இது பேறு காலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் (MMR), பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (IMR) மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை ஆகியவை உள்ளிட்ட 17 அளவுருக்களின் அடிப்படையில் மாவட்டங்களை மதிப்பீடு செய்தது.
  • ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார துணை மையங்கள், மாவட்டத் தலைமையக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி சார்ந்த மருத்துவமனைகள் ஆகியவற்றினைத் தமிழக அரசு தரவரிசைப் படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • காஞ்சிபுரம், நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்கள் சிறந்த செயல்திறன் கொண்டவை ஆகும்.
  • தென்காசி, திருப்பத்தூர், திண்டுக்கல் ஆகியவை இப்பட்டியலில் கடைசி இடங்களில் இடம் பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்