100 ஆண்டு கால சேவையைக் குறிக்கும் வகையில், DPHICON 2022 எனப்படும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகத்தின் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசானது, மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் மேலும் 200 முதல் 250 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் (PHC) 2,000 முதல் 2,500 கூடுதல் சுகாதார துணை மையங்களையும் (HSC) அமைக்க உள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 சுகாதார துணை மையங்கள் உள்ளன.
விதிமுறைகளின்படி, 5,000 மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சுகாதார துணை மையங்கள் அமைந்திருக்க வேண்டும்.
மக்கள்தொகையின் அடிப்படையில், மாநிலத்திற்குக் குறைந்தபட்சம் 2,000 முதல் 2,500 துணை சுகாதார மையங்கள் அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கும்.
தமிழக மாநிலத்தில் 12,525 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன.
எனவே, தற்போது 8,713 சுகாதார துணை மையங்கள் இருப்பதன் பட்சத்தில் மேலும் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார துணை மையங்கள் அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
கிராமப் பகுதிகளில் 30,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், மலைப் பகுதிகளில் 20,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், நகரங்களில் 50,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் இருக்க வேண்டும்.
தமிழக அரசின் சுகாதார இயக்குனரகம் ஆனது நலம் 360 என்ற யூடியூப் ஊடகத்தினை விரைவில் தொடங்கவுள்ளது.