TNPSC Thervupettagam

சுகாதார மையங்களின் விரிவாக்கம்

December 10 , 2022 590 days 369 0
  • 100 ஆண்டு கால சேவையைக் குறிக்கும் வகையில், DPHICON 2022 எனப்படும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகத்தின் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு அரசானது, மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் மேலும் 200 முதல் 250 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் (PHC) 2,000 முதல் 2,500 கூடுதல் சுகாதார துணை மையங்களையும் (HSC) அமைக்க உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 சுகாதார துணை மையங்கள் உள்ளன.
  • விதிமுறைகளின்படி, 5,000 மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சுகாதார துணை மையங்கள் அமைந்திருக்க வேண்டும்.
  • மக்கள்தொகையின் அடிப்படையில், மாநிலத்திற்குக் குறைந்தபட்சம் 2,000 முதல் 2,500 துணை சுகாதார மையங்கள் அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கும்.
  • தமிழக மாநிலத்தில் 12,525 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன.
  • எனவே, தற்போது 8,713 சுகாதார துணை மையங்கள் இருப்பதன் பட்சத்தில் மேலும் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார துணை மையங்கள் அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
  • கிராமப் பகுதிகளில் 30,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், மலைப் பகுதிகளில் 20,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், நகரங்களில் 50,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் இருக்க வேண்டும்.
  • தமிழக அரசின் சுகாதார இயக்குனரகம் ஆனது நலம் 360 என்ற யூடியூப் ஊடகத்தினை விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்