TNPSC Thervupettagam

சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கை

November 21 , 2023 369 days 258 0
  • இந்த புதிய உலகளாவிய கணிப்புகள் ஆனது சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த லான்செட் கவுண்டவுன்-இன் 8வது வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
  • இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் (தொழில்துறை காலத்திற்கு முந்தைய நிலைகளை விட) அதிகரித்தால், நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் ஆண்டுதோறும் 370% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • அதிக வெப்பநிலைக்கு வெளிப்படுவதன் காரணமாக இந்தியா 219 பில்லியன் டாலர் செயல்திறன் சார்ந்த வருமான இழப்பை சந்தித்தது.
  • மேலும், 2022 ஆம் ஆண்டில் வெப்ப வெளிப்பாட்டின் (வெயிலில் வேலை செய்தல்) காரணமாக 191 பில்லியன் மதிப்பில் செயல்திறன் மிக்க உழைப்பு நேரம் இழக்கப்பட்ட நிலையில் இது 1991-2000 ஆம் கால கட்டத்தில் இருந்த அளவை விட 54 சதவீதம் அதிகமாகும். 
  • 2022 ஆம் ஆண்டில் 64 சதவிகித செயல்திறன் மிக்க நேர இழப்பும், 5.5 சதவிகித செயல்திறன் மிக்க வருமான இழப்புடன் வேளாண் தொழிலாளர்கள் தான் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உலகளவில், 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் ஏற்படும் அதிக வெப்பநிலை தொடர்பான இறப்புகள் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்