சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த லான்செட் கணிப்பு
January 5 , 2024 324 days 258 0
1986-2005 என்ற அடிப்படை ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடும்போது 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் கோடை காலத்தின் சராசரி வெப்ப நிலையானது 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, பொது மக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு வினாடிக்கும் 1,337 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.
1986-2005 ஆகிய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2013-2022 ஆம் காலக் கட்டம் முதல் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எதிர் கொண்ட மொத்த வெப்ப அலையின் தாக்க நாட்களின் எண்ணிக்கையில் 43% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதே காலக் கட்டத்தில், 65 வயதுக்கு மேற்பட்ட முதிர் வயதினர் வெப்ப அலையால் பாதிப்புக்குள்ளான நாட்களில் 216% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மட்டும் 191 பில்லியன் திறன் மிக்க உழைப்பு நேரம் இழக்கப் பட்டுள்ள நிலையில் ,இது 1991-2000 ஆம் ஆண்டிலிருந்த அளவை விட 54% அதிகரித்து உள்ளது.
இந்த இழப்பு ஆனது 2022 ஆம் ஆண்டில் சுமார் 219 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருமான இழப்பிற்கு வழி வகுத்த நிலையில், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.3 சதவீதத்திற்குச் சமம் ஆகும்.
வேளாண் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்ததோடு அவர்கள் 64% உழைப்பு மணி நேரங்களை இழந்ததோடு, 55% வருவாய் இழப்பினையும் எதிர்கொண்டனர்.