சுகாதாரம் மற்றும் மாசு குறித்த உலகளாவியக் கூட்டணி – அறிக்கை
December 24 , 2019 1797 days 715 0
சுகாதாரம் மற்றும் மாசு குறித்த உலகளாவிய கூட்டணியானது “2019 ஆம் ஆண்டின் மாசு மற்றும் சுகாதார நல அளவீடுகள்: உலகளாவிய, பிராந்திய மற்றும் நாடுகள் தொடர்பான பகுப்பாய்வு” என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, மாசு காரணமாக ஏற்படும் அகால இறப்புகளின் (வயது முதிர்வின் படி அல்லாமல்) அடிப்படையில் 2017 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 2.3 மில்லியன் (23,26,771 இறப்புகள்) இறப்புகளைக் கொண்டு, உலக அளவில் முன்னிலை வகிக்கின்றது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா (18,65,566 இறப்புகள்), நைஜீரியா (2,79,318 இறப்புகள்) ஆகிய நாடுகள் அதிக அளவிலான இறப்புகளைக் கொண்டுள்ளன.
இந்த அறிக்கையானது காற்று, நீர் மற்றும் பணியிடத்தில் ஏற்படும் அசுத்தங்களின் உலகளாவிய தாக்கத்தை மதிப்பிடுகின்றது.
பிற தரவுகள்
மாசுபாடு காரணமாக 1 லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்படும் மொத்த அகால இறப்புகளில், சாட் நாடு 287 இறப்புகளுடன் முதலிடத்திலும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (251) இரண்டாவது இடத்திலும் வட கொரியா (202) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 174 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
காற்று மாசுபாட்டால் மட்டுமே அகால இறப்புகளில், சீனா 12, 42,987 இறப்புகளுடன் முதலிடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் (12,40,529 இறப்புகள்) பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் (1,28,005) உள்ளன.
இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள 3 பட்டியல்களில் இந்தியா மட்டுமே அனைத்திலும் சேர்க்கப் பட்டுள்ளது.