TNPSC Thervupettagam
November 20 , 2024 5 days 61 0
  • மத்திய அரசானது, சுக்னா வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றியுள்ள 1 கிலோ மீட்டர் முதல் 2.035 கிலோ மீட்டர் வரையிலான ஒரு பகுதியை ஹரியானா மாநில எல்லையில் அமைந்த சுற்றுச்சூழல் தாங்கு மண்டலமாக (ESZ) வரையறுக்க உள்ளது.
  • ESZ மண்டலத்தின் அனைத்து நடவடிக்கைகளும் 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழான விதிகளால் நிர்வகிக்கப்படும்.
  • இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதற்குத் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் வணிக ரீதியிலான சுரங்கம், கல் குவாரி மற்றும் கல் உடைப்பு ஆலைகள், புதிய மரச்சட்ட அறுப்பு ஆலைகள் அமைத்தல் மற்றும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல் ஆகியவை அடங்கும்.
  • சுக்னா வனவிலங்கு சரணாலயம் ஆனது சண்டிகர் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு இது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்