மத்திய அரசானது, சுக்னா வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றியுள்ள 1 கிலோ மீட்டர் முதல் 2.035 கிலோ மீட்டர் வரையிலான ஒரு பகுதியை ஹரியானா மாநில எல்லையில் அமைந்த சுற்றுச்சூழல் தாங்கு மண்டலமாக (ESZ) வரையறுக்க உள்ளது.
ESZ மண்டலத்தின் அனைத்து நடவடிக்கைகளும் 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழான விதிகளால் நிர்வகிக்கப்படும்.
இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதற்குத் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் வணிக ரீதியிலான சுரங்கம், கல் குவாரி மற்றும் கல் உடைப்பு ஆலைகள், புதிய மரச்சட்ட அறுப்பு ஆலைகள் அமைத்தல் மற்றும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல் ஆகியவை அடங்கும்.
சுக்னா வனவிலங்கு சரணாலயம் ஆனது சண்டிகர் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு இது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.