சுக்னா ஏரியானது, அதன் உயிர்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்று ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மூன்று மாத காலத்திற்குள் சுக்னா ஏரியை ஈரநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகத்திற்கு அந்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் ஆகியவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களை இடிக்கவும் அந்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.