TNPSC Thervupettagam

சுக்ஹாத் யாத்ரா-செயலி

April 19 , 2018 2283 days 696 0
  • நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது (Ministry of Road Transport & Highways-MoRTH) சுக்ஹாத் யாத்ரா (Sukhad Yatra) எனும் கைபேசி செயலியையும், 1033 எனும் இலவச அவசரகால உதவி அழைப்பு எண்ணையும்  (Toll-free Emergency number)  தொடங்கியுள்ளது.
  • நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்கு (highway users) அதிகாரம் (To empower) அளிப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (National Highways Authority of India-NHAI) இந்த செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலைகளில் உள்ள குழிகள், நெஞ்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகள் மற்றும் பிற அசம்பாவிதங்களைப் பற்றி தகவல் தெரிவிக்கவும், சாலைகளின் தரம் தொடர்பான தகவல்களைப் பற்றி நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்கள் அறிந்து கொள்ளவும்  உதவுகின்ற வசதிகள்  உட்பட பல்வேறு வசதிகள் இந்த செயலியின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
  • இந்த செயலியினைப் பயன்படுத்தி நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்கள் FASTag சீட்டுக்களை வாங்கவும் இயலும்.
  • இந்த செயலியானது நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்கு நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த எதிர்பார்க்கப்படும் காத்திருப்பு நேரம் (waiting time expected at toll Plazas) தொடர்பான உண்மை நேரத் தரவுகளை (real-time data)  வழங்கும்.
  • ஓட்டுநர்களிடையே பழக்கவழக்க மாற்றங்கள் (behavioural changes)   மற்றும் மனப்பான்மை மாற்றங்கள் (attitudinal changes)  போன்ற பழக்கங்களை (Habit) கற்பிப்பதும் இந்த செயலியின் நோக்கமாகும்.
  • அபாயகரமாக மற்றும் ஆபத்தான பொருட்களைக் கொண்டு செல்லும் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்