105 மீட்டர் நீளமுடைய ஆறு கடலோர காவற் ரோந்து படகுகள் வரிசையின் ஆறாவது கப்பலான “சுஜய்“ கப்பலை கோவாவில் இந்திய கடலோரக் காவற்படை ரோந்து காவற்பணியில் இணைத்துள்ளது.
“பெரும் வெற்றி“ எனும் பொருளுடைய சுஜய் எனும் பெயரானது இக்கப்பலிற்கு சூட்டப்பட்டுள்ளது.
105 மீட்டர் நீளமுடைய கடலோர ரோந்து கடற்படகுகளானது கோவாவில் உள்ள கப்பற் கட்டுதளத்தில் உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டு நவீனகால (State of Art) வழிகாட்டு மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் (Navigation and Communication), உணர்விகள் (Sensors) போன்றவை பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு கடற்காவற் கட்டுப்பாட்டு செயல் மற்றும் நிர்வாகப் பிரிவின் கீழ் ஒடிஸாவின் பாரதீப் கடலோரக் காவற்படை தளத்தில் இக்கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்பரப்புகளின் பிரத்யேக பொருளாதார மண்டலங்களின் (Exclusive Economic Zone) கண்காணிப்பிற்கென ஈடுபடுத்தப்பட உள்ள இக்கப்பலானது குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கடற்சார் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும்.