TNPSC Thervupettagam

சுடரொளியற்ற சூரிய வெப்ப உமிழ்வு 2025

March 19 , 2025 13 days 73 0
  • சூரிய வளிமண்டலத்திலிருந்து ஒரு சுடரொளியற்ற சூரிய வெப்ப உமிழ்வு (CME) பற்றிக் கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • ஆதித்யா-L1 கலத்தில் உள்ள சூரியனின் கட்புலனாகும் ஒரு பகுதியின் வெப்ப உமிழ்வு கரொனா அடுக்கு ஆய்வுக் (VELC) கருவியின் உதவியுடன் இது கண்டறியப்பட்டது.
  • சுடரொளி மற்றும் சூரிய வெப்ப உமிழ்வுகள் சூரியனில் நிகழும் வெடிப்பு நிகழ்வுகள் ஆகும்.
  • அங்கு காந்தப்புலக் கோடுகள் மறுசீரமைக்கப்படும் போது காந்த மறு இணைப்பு காரணமாக அவை ஏற்படுகின்றன.
  • ஒரு சுடரொளி தோற்ற நிகழ்வின் போது, ​​ஆற்றல் ஆனது முதன்மையாக வெப்பமான பிளாஸ்மாவிலிருந்து மின்காந்த கதிர்வீச்சாக வெளியிடப்படுகிறது.
  • சுடரொளி தோற்ற நிகழ்வுடன் ஒப்பிடும் போது, ​​CME நிகழ்வுகள் என்பது வினாடிக்கு 3,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் சுமார் டிரில்லியன் கிலோகிராம் எடை உள்ள பிளாஸ்மா மற்றும் காந்தப்புலத்தின் மாபெரும் வெடிப்புகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்