TNPSC Thervupettagam

சுடர்மிகு நட்சத்திரம்

June 8 , 2024 169 days 241 0
  • நமது சூரியக் குடும்பத்திலிருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மங்கலான நட்சத்திரத்தினை 1946 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இரவு வானத்தில் விரைவில் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
  • அதிகாரப்பூர்வமாக T கொரோனே போரியாளிஸ் (T CrB) என்று அழைக்கப்படும் "சுடர்மிகு நட்சத்திரம்" ஆனது, தற்போதிலிருந்து 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் மிகப் பிரகாசமாக காணப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தச் சுடர்மிகு நட்சத்திரத்தைப் பூட்ஸ் மற்றும் ஹெர்குலஸ் ஆகிய விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ள "வடக்கு மகுடம்" என்றழைக்கப்படும் கொரோனே போரியாளிஸ் விண்மீன் திரளில் காணப்படும்.
  • இந்தச் சுடர்மிகு நட்சத்திரம் ஆனது, 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதியன்று, அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 600 மடங்கு பிரகாசமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்