சமீபத்தில் இந்திய வனவிலங்கு மையமானது சுடலைக் குயில் பறவையின் வலசை போதல் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
சுடலைக் குயிலின் வலசை போதல் வழியினைக் கண்டறிந்து, அவற்றைக் கண்காணிக்க வேண்டி நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலாவது ஆய்வு இதுவாகும்.
இது பருவ மழை, பருவ மழையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பருவக் காற்றுகள் குறித்த தகவல்களை வழங்க உள்ளது.
இது இந்திய உயிரித் தகவல் அமைப்புத் திட்டமாகும் (IBIN - Indian Bio resource Information Network).
IBIN என்பது உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஒரு மிகப்பெரிய திட்டமாகும்.
இது தாவரங்கள், விலங்குகள், கடல்சார் இடங்கள், இடம் சார்ந்த பரவல் மற்றும் நுண்ணுயிரி வளங்கள் போன்ற இந்தியாவின் உயிரி வளங்கள் குறித்த தகவல்களை அளிக்கும் ஒரு ஒற்றைத் தளமாக தனித்துவமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளது.