TNPSC Thervupettagam

சுண்ணாம்பு அடிப்படையிலான டிரைக்கோடெர்மா உயிரிப் பூச்சிக்கொல்லி

January 14 , 2024 186 days 202 0
  • கோழிக்கோட்டில் அமைந்துள்ள, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனமானது அளவில் சிறிய சுண்ணாம்பு அடிப்படையிலான டிரைக்கோடெர்மா கலப்பு என்ற பூஞ்சை உயிரி-கட்டுப்பாட்டுக் காரணியை உருவாக்கியுள்ளது.
  • ‘ட்ரைக்கோலைம்’ என பெயரிடப்பட்ட இந்தக் கலப்பானது, ட்ரைக்கோடெர்மா மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் மூலம் இதன் பயன்பாட்டினை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு உதவுகிறது.
  • இது மண்ணில் பரவும் பல தாவர நோய்க்கிருமிகளை ஒடுக்குவதில் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, பயிர் உற்பத்தியில் வெற்றிகரமான உயிரி-பூச்சிக் கொல்லி மற்றும் உயிரி உரமாகவும் செயல்படுகிறது.
  • ட்ரைக்கோலைம், அதிக காலம் தேவைப்படும் இருபடி செயல்முறையின் தேவையை நீக்குகிறது.
  • இந்த சுண்ணாம்பு அடிப்படையிலான கலப்பானது, மண்ணின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குவதோடு, தாவர வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் மண்ணில் பரவும் நோய்க்கிருமிகளிடமிருந்துப் பயிர்களைப் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்