தமிழக முதல்வர் ‘முதல்வர் மருந்தகம்’ (முதலமைச்சரின் மருந்தகம்) திட்டத்தினை அறிவித்தார்.
இது இந்த மாநிலத்தில் மானிய விலையில் பொதுப் பெயர் கொண்ட மருந்துகளை குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இருந்து தமிழகத்தில் இது போன்று மொத்தம் 1,000 மருந்தகங்கள் இயக்கப்படும்.
‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தினையும் அவர் அறிவித்தார்.
இத்திட்டம் ஆனது இராணுவ வீரர்களுக்கு தொழில்களைத் தொடங்குவதற்கு 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறது.
இந்தக் கடன் உதவியில் 30 சதவீத மூலதன மானியமும் 30 சதவீத வட்டி மானியமும் வழங்கப் படும்.
மூத்க்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதினையும் முதல்வர் வழங்கினார்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதானது இஸ்ரோ அமைப்பின் அறிவியலாளர் P. வீரமுத்து வேலுக்கு வழங்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிய செவிலியர் A. சபீனாவுக்கு தைரியம் மற்றும் துணிச்சலான நடவடிக்கைக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ஆனது 20,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
தியாகிகளின் குடும்ப ஓய்வூதியமும் 11,000 ரூபாயிலிருந்து 11,500 ரூபாயாக உயர்த்தப் படும்.
கட்டபொம்மன், வ.உ.சி மற்றும் மருது சகோதரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆனது 10,500 ஆக உயர்த்தப்படும்.