தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தைரியம் மிக்க மற்றும் துணிச்சல் மிக்க நிறுவனத்திற்கான கல்பனா சாவ்லா விருதினை P. சண்முகப்பிரியா என்பவருக்கு அவரது மறைவிற்குப் பிறகு வழங்கினார்.
மறைந்த டாக்டர் P. சண்முகப் பிரியா மதுரையிலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபு ரிந்து வந்த ஒரு மருத்துவ அலுவலர் ஆவார்.
டாக்டர் A.P.J. அப்துல் கலாம் விருதானது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த பேராசிரியர் டாக்டர் M. லக்சுமணன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும் நூறு வயதை எட்டிய தலைவருமான N. சங்கரய்யா அவர்களுக்கு முதலாவது தகைசால் விருதினை முதல்வர் வழங்கினார்.
கிண்டியிலுள்ள அரசு கொரோனா மருத்துவமனையின் இயக்குநர் K. நாராயணசாமி அவர்களுக்கு முதலமைச்சரின் சிறந்த நடைமுறைகளுக்கான விருதானது வழங்கப் பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி மாணவர்களின் சுயாதீனமானக் கற்றலை எளிதாக்கியதற்காக பிரசிடென்சி கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஔவையார் விருதானது சாந்தி துரைசாமி என்பவருக்கு வழங்கப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு என்பவருக்கு சிறந்த மாற்றுப் பாலினத்தவர் விருதானதுவழங்கப்பட்டது.