78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மொத்தம் 1,037 காவலர்களுக்கு காவல்துறை பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்தப் பட்டியலில்
வீர தீர செயலுக்கான ஒரு குடியரசுத் தலைவர் பதக்கம்,
வீர தீர செயலுக்கான 213 காவல் துறை பதக்கங்கள்,
சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் 94 காவல் துறை பதக்கங்கள், மற்றும்
போற்றத்தக்க சேவைக்கான 729 காவல் துறை பதக்கங்கள் ஆகியவை அடங்கும்.
2022 ஆம் ஆண்டு கத்தியால் குத்தப்பட்ட போதிலும் இரண்டு நகைச்சங்கிலி திருடர்களைப் பிடித்த தெலுங்கானா காவல்துறையின் தலைமைக் காவலர் சதுவு யாதய்யாவுக்கு வீர தீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப் பட்டு உள்ளது.
வீர தீர செயலுக்கான 213 பதக்கங்களில் (GM), 208 பதக்கங்களில் காவலர்களுக்கும், ஜம்மு & காஷ்மீர் காவல்துறையினைச் சேர்ந்த 31 பேரும், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவினைச் சேர்ந்த தலா 17 பேரும், சத்தீஸ்கர் மாநிலத்தினைச் சேர்ந்த 15 பேரும், மத்தியப் பிரதேசத்தினைச் சேர்ந்த 12 பேரும், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றினைச் சேர்ந்த தலா 7 பேரும் பதக்கங்களைப் பெற்று உள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த K.வன்னிய பெருமாள் மற்றும் அபின் தினேஷ் மோடக் ஆகியோர் சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்களைப் பெற்று உள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த N.கண்ணன், A.G.பாபு, பிரவீன் குமார் அபினாபு மற்றும் K.பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் சிறந்த சேவைக்கான பதக்கத்தினைப் பெற்று உள்ளனர்.