மியான்மர் அரசாங்கமானது சிறுபான்மையினரான ரோஹிங்யா முஸ்லிம் இனத்திற்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு சுதந்திரமான ஆணையக் குழுவை நியமித்துள்ளது.
இக்குழுவில் உள்ள 4 உறுப்பினர்கள்.
கென்சோ ஓசிமா - ஐ.நா.வுக்கான முன்னாள் ஜப்பானியத் தூதர் மற்றும் ஐ.நா.வின் முன்னாள் மனிதாபிமான விவகாரங்களுக்கான பொதுத் துணைச் செயலாளர்.
ரோசரியோ மணலோ - பிலிப்பைனின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர்.
மியா தெய்ன் - மியான்மர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர்.
ஆங் துன் தெட் - பொருளாதார வல்லுநர் மற்றும் ஐ.நா வின் முன்னாள் அதிகாரி.