TNPSC Thervupettagam

சுதந்திரமான (தடையற்ற) போக்குவரத்து அனுமதி முறையின் முடிவு

January 6 , 2024 195 days 224 0
  • மியான்மர் எல்லையில் உள்ள சுதந்திரமான போக்குவரத்து (நடமாட்ட) அனுமதி முறையை (FMR) ரத்து செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது.
  • இனி, எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் இந்தியாவைக் கடக்க நுழைவு இசைவுச் சீட்டுத் தேவைப்படும்.
  • இந்தியாவும் மியான்மரும் பாதுகாப்பு வேலிகள் இல்லாத எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதோடு இருபுறமும் உள்ள மக்களுக்கு குடும்ப மற்றும் இனம் சார்ந்த தொடர்புகள் உள்ள நிலையில் 1970 ஆம் ஆண்டுகளில் ஒரு செயல்முறையை அறிமுகம் செய்ய இது தூண்டியது.
  • இது கடைசியாக 2016 ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டது.
  • சுதந்திரமான போக்குவரத்து அனுமதி முறையின் கீழ், இந்தியக் குடிமகன் அல்லது மியான்மரின் குடிமகன் மற்றும் எல்லையின் இருபுறமும் 16 கி.மீ தொலைவில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினரின் ஒவ்வொரு உறுப்பினரும் எல்லை அனுமதிச் சீட்டினைப் பெறுவதன் மூலம் எல்லையை கடக்கலாம்.
  • இந்த கடவுச் சீட்டு வழக்கமாக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்பதோடு மேலும் அவர்கள் ஒரு வருகைக்கு இரண்டு வாரங்கள் வரை அங்கு தங்கலாம்.
  • அருணாச்சலப் பிரதேசம் (520 கி.மீ), நாகாலாந்து (215 கி.மீ), மணிப்பூர் (398 கி.மீ), மற்றும் மிசோரம் (510 கிமீ) ஆகிய மாநிலங்கள் வழியாக மியான்மருடன் 1,643 கி.மீ நீள எல்லையை  இந்தியா பகிர்ந்து கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்