மத்திய அரசானது பல்வேறு திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் மொத்தம் 116 புதிய சுற்றுலாத் தலங்களை அனுமதித்துள்ளது.
இவற்றில் 34 தலங்கள் ஆனது, சுதேச தரிசனம் 2.0 திட்டத்தின் கீழ் அனுமதிக்கப் பட்டு உள்ள நிலையில் அவற்றில் 42 தலங்கள் ஆனது சுதேச தரிசனத் திட்டத்தின் துணைத் திட்டமான “சவால் அடிப்படையிலான இலக்கு மேம்பாடு (CBDD)” என்ற திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன.
40 தலங்கள் ஆனது, மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவி (SASCI) திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்.
சுதேச தரிசனத் திட்டம் ஆனது, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் ஒரு மிகவும் முதன்மை முன்னெடுப்பாகும்.
இது கருத்துரு அடிப்படையிலான தலச் சுற்றுகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மாநில அரசுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலமும் நிலையான மற்றும் மிகவும் பொறுப்பு மிக்கச் சுற்றுலா தலங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலையான சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் ஆனது சுதேச தரிசனம் 2.0 (SD2.0) ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.