தமிழக அரசானது 13 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
தமிழக அரசின் தொழில்துறையின் முன்னாள் செயலாளர் N. சுந்தரதேவன் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
இக்குழுவானது தமிழகத்திலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து, அத்துறையின் மீள்விற்கு அவசியமான உடனடி, இடைக்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.