TNPSC Thervupettagam

சுனாமி ஒத்திகைப் பயிற்சி ‘IOWave18’

September 4 , 2018 2178 days 616 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பெருங்கடல் சீற்றப்பயிற்சி (IOWave18) செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி இந்தியப் பெருங்கடலில் தொடங்கியது. இந்தியாவானது மற்ற 23 நாடுகளுடன் இணைந்து இந்த மாபெரும் பெருங்கடல் முழுவதும் நடைபெறும் சுனாமி ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்கிறது.
  • இந்த முன்னெச்சரிக்கைப் பயிற்சியானது யுனெஸ்கோவின் நாடுகளுக்கிடையேயான பெருங்கடல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இப்பயிற்சியானது, 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கடலோர சமூகங்களைச் சேர்ந்த 1,25,000க்கும் அதிகமான மக்களை வெளியேற்றும் ஒத்திகையைக் கொண்டதாகும்.
  • இந்தியாவில், IOWave18 ஆனது மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தால் (INCOIS - Indian National Centre for Ocean Information Services) தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA - National Disaster Management Authority) மத்திய உள்துறை அமைச்சகம் (MHA - Ministry of Home Affairs), தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் போன்றவற்றின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்