மத்திய உள்துறை அமைச்சகமானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) மற்றும் பெருங்கடல் தகவல் சேவைக்கான ஆராய்ச்சி மையம் (INCOIS- Indian National Centre For Ocean Information Services) போன்றவற்றின் மூலமாக சுனாமி முன்னெச்சரிக்கையின் தயார்நிலைக்கான ஒத்திகை பயிற்சிகளை பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டது.
நாட்டின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சிகளை மேற்கொள்வது இதுவே முதன் முறையாகும்.
கிழக்கு கடற்கரை முழுவதும் அதாவது மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றின் 31 கடலோர மாவட்டங்களில் ஒரே நேரத்தில் இந்த ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நவம்பர் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட 2-வது உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தன்று மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்ட பல்வேறு செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.