சுமார் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கி இருந்த பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
திரு. வில்மோர் மற்றும் திருமதி. வில்லியம்ஸ் விண்வெளியில் 286 நாட்கள் தங்கி இருந்தனர்.
அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட போது எதிர்பார்த்ததை விட சுமார் 278 நாட்கள் அதிக நாட்கள் விண்வெளியில் செலவிட்டுள்ளனர்.
அவர்கள் பூமியை 4,576 முறை சுற்றி வந்தனர் மற்றும் விண்கலப் பெட்டகம் புவிக்குத் திரும்பும் நிலையில் போது சுமார் 121 மில்லியன் மைல்கள் (சுமார் 195 மில்லியன் கிலோமீட்டர்) பயணம் செய்தனர்.
ஒன்பது விண்வெளி நடைப் பயணங்களில், 62 மணி நேரம் விண்வெளியில் நடந்து, பெண் விண்வெளி வீரர்களில் அதிக நேரம் விண்வெளி நடைப் பயணத்தில் செலவிட்ட பெண்மணி என்ற சாதனையை வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் 05 ஆம் தேதியன்று நாசாவின் போயிங் என்ற பயணக் குழுவின் விண்வெளிப் பயணச் சோதனையில் நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளிக்குச் சென்றனர்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலம் ஆனது, பூமியின் சுற்றுப்பாதை மற்றும் அதற்கு அப்பாலான பகுதிகள் வரை ஏழு பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய வகையில் உள்ளது.