TNPSC Thervupettagam

சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள்

January 23 , 2020 1648 days 632 0
  • இந்தியா சுபாஷ் சந்திரபோஸின் 123வது ஆண்டு பிறந்த நாள் விழாவினை அனுசரித்தது.
  • அவர் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று பிறந்தார்.
  • நேதாஜியின் பிறந்த நாளை நினைவு கூரும் பொருட்டு, இந்திய அரசு வாரணாசியில் நேதாஜியின் (நேதாஜி கோயில்) பெயரில் ஒரு தலித் பெண்ணை தலைமைப் பூசாரியாக நியமித்து ஒரு கோயிலைத் திறந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்தக் கோயிலானது பாரத அன்னையை வழிபாடு செய்யுமாறு அமைக்கப்பட உள்ளது.
  • இந்தக் கோயிலானது சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கட்டப்பட உள்ளது.
  • சிவப்பு நிறமானது புரட்சியையும் கருப்பு நிறமானது வலிமையையும் வெள்ளை நிறமானது அமைதியையும் குறிக்கின்றது.
  • இந்திய அரசானது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று ஒரு விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்பதை 2017 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்