சுய-ஆட்சி அல்லாத பிரதேசங்களின் மக்களுடனான சர்வதேச ஒற்றுமைக்கான வாரம் - மே 25/31
May 28 , 2024 180 days 138 0
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில், சுய-ஆட்சி அல்லாத பிரதேசம் என்பது "இன்றும் முழு அளவிலான சுய ஆட்சியினை அடையாத மக்கள்" என வரையறுக்கப் படுகிறது.
1946 ஆம் ஆண்டில், ஐநாவின் எட்டு உறுப்பினர் நாடுகள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள 72 பிரதேசங்களை சுய-ஆட்சி இல்லாதவை என்று கருதுவதாகப் பட்டியலிட்டன.
1959 ஆம் ஆண்டிற்கு முன் எட்டு பிரதேசங்கள் சுய ஆட்சிப் பெற்றன.
1963 ஆம் ஆண்டில், 1960 ஆம் ஆண்டு காலனியாக்க விலக்கம் குறித்த பிரகடனம் பொருந்தக் கூடிய 64 பிரதேசங்களின் திருத்தப்பட்டப் பட்டியலுக்கு சட்டமன்றம் தனது ஒப்புதல் அளித்தது.
1960 முதல் 2002 ஆம் ஆண்டு வரை, 54 பிரதேசங்கள் சுய ஆட்சியினை அடைந்தன.
தற்போது, 17 சுய ஆட்சியற்றப் பிரதேசங்களே மீதமுள்ளன.