சுயமரியாதை திருமணச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
September 2 , 2023 451 days 1212 0
1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் 7(A)வது பிரிவின் கீழ் "சுயமரியாதை" திருமணங்களை நடத்துவதற்கு வழக்கறிஞர்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
1968 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதியன்று, 1967 ஆம் ஆண்டு இந்து திருமண (தமிழ்நாடு சட்டத் திருத்தம்) சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டத் திருத்தம் ஆனது 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் 7-A என்ற பிரிவைச் சேர்த்து அதனைத் திருத்தியமைத்தது.
இருப்பினும், இந்தப் பிரிவு தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டுமே நீட்டிக்கப் பட்டது.
7-A என்ற பிரிவானது, "சுயமரியாதை மற்றும் மதச்சார்பற்ற திருமணங்கள்" குறித்த சிறப்பு விதிமுறைகளைக் கொண்டுள்ளது.
இது "இரண்டு இந்துக்களுக்கு இடையேயான எந்தவொரு திருமணத்தையும்" சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கிறது.
இதனை "சுயமரியாதை" அல்லது "சீர்திருத்தத் திருமணம்" அல்லது வேறு எந்தப் பெயராலும் குறிப்பிடப்படலாம்.