TNPSC Thervupettagam

சுயாதீன நிபுணர் நியமனம் குறித்த வாக்கெடுப்பு

July 13 , 2019 1868 days 580 0
  • பாலியல் ரீதியாக சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகள் குறித்து அறிக்கை அளிக்கும் முக்கியமான ஐ.நா. அதிகாரியின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்கவில்லை.
  • இந்தத் தீர்மானமானது உலகெங்கிலும் உள்ள LGBTQ சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து அறிக்கையளிக்கும் தனிச் சுதந்திரமுடைய நிபுணருக்கு மூன்று ஆண்டுக் கால பதவி நீட்டிப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்தத் தீர்மானத்திற்கு மனித உரிமைகள் மன்றத்தில் பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவு கிடைத்தது.
  • ஆனால் இந்தியா, அங்கோலா, புர்கினா பாஸோ, கேமரூன், காங்கோ, ஹங்கேரி, தாகோ மற்றும் செனகல் போன்ற நாடுகள் இறுதி வாக்கெடுப்பில் வாக்களிக்கவில்லை.
  • பாகிஸ்தான், சவுதி அரேபியா, சீனா, வங்காள தேசம், பஹ்ரைன், கத்தார், சோமாலியா ஆகிய நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
  • 2016 ஆம் ஆண்டின் தனிச் சுதந்திரமுடைய நிபுணர் தேர்ந்தெடுப்பிற்கான வாக்கெடுப்பின் போதும் இந்தியா வாக்களிக்கவில்லை.
  • கோஸ்டாரிகா நாட்டின் விக்டர் மாட்ரிகல் போர்லியோஸ் தற்போதைய தனிச் சுதந்திர நிபுணராக உள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்