கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சுரக்ஷித் பச்பன் – சுரக்ஷித் பாரத்திற்கான பாரத யாத்ராவின் நிறைவு விழா ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சுரக்ஷித் பச்பன் – சுரக்ஷித் பாரத்திற்கான இந்த யாத்திரையானது நமது நாட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான ஒரு முக்கிய அடியாகும்.
இந்த யாத்திரையின் நோக்கங்களுடன் இணைந்து சிறந்த இந்தியாவின் சிறந்த குடிமகனாக இருக்கும் அனுபவத்தினை நமது குழந்தைகளுக்கு வழங்குவது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.
“சுரக்ஷித் பச்பன் – சுரக்ஷித் பாரத்திற்கான” பாரத யாத்திரையானது பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் கடத்தல் போன்றவற்றிற்கு எதிரான வன்முறையற்ற போராகும். விழாவில் ஜனாதிபதி ‘பல் சுரக்ஷா ஜோதி’ என்ற அடையாள தீபத்தினை ஏற்றி வைத்தார்.