TNPSC Thervupettagam

சுரங்க பவாடி - பண்டைய நீர் வழங்கல் அமைப்பு

November 12 , 2019 1715 days 644 0
  • கர்நாடகாவில் நிலத்தடிச் சுரங்கங்கள் வழியாக நீர் வழங்குவதற்கான பண்டைய “கரேஸ் அமைப்பின்” ஒருங்கிணைந்த பகுதியான சுரங்க பவாடியானது 2020 ஆம் ஆண்டிற்கான உலக நினைவுச் சின்ன கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • உலக நினைவுச் சின்னங்கள் நிதியம் (World Monuments Fund - WMF) என்ற ஒரு அரசு சாரா நிறுவனத்தால் “தக்காணப் பீடபூமியின் பண்டைய நீர் அமைப்பு” என்ற பிரிவின் கீழ் இந்த நினைவுச் சின்னம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள பண்டைய நினைவுச் சின்னங்களை மறுசீரமைப்பதை WMF அமைப்பு கண்காணிக்கின்றது.
  • கரேஸ் நிலத்தடி அமைப்பானது 16 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பீஜப்பூர் சுல்தானகத்தின் மன்னரான முதலாம் அலி அடில் ஷா என்பவரால் கட்டப்பட்டது.
  • இவரது வாரிசான இரண்டாவது இப்ராஹிம் அடில் ஷா என்பவர் இதை  வலுப்படுத்த அதில் சில கூடுதல் கட்டமைப்புகளைச் சேர்த்தார்.
  • ‘கரேஸ்’ ஆனது உலகின் மிகச் சிறந்த நீர் வழங்கல் அமைப்புகளில் ஒன்றாக நம்பப் படுகிறது. ஆனால் பராமரிப்பு இல்லாததால் இது மோசமான நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்