TNPSC Thervupettagam

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா- 2023

August 5 , 2023 352 days 196 0
  • மாநிலங்களவையில் 2023 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதாவிற்குக் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்தது.
  • நாட்டின் சில முக்கியமான கனிமங்களுக்கான சுரங்கக் குத்தகைகள் மற்றும் கூட்டு உரிமங்களை ஏலம் விடுவதற்கு வேண்டி இந்த மசோதா மத்திய அரசிற்கு பிரத்தியேக அதிகாரம் அளிப்பதோடு இந்த ஏலங்களின் மூலம் மாநில அரசுகளும் வருவாயைப் பெறும்.
  • இந்த மசோதாவானது தனியார் துறைப் பங்கேற்பினை அதிகரிக்கவும் முயல்கிறது.
  • 12 அணுக்கரு கனிமங்களில் லித்தியம் மற்றும் தங்கம் & வெள்ளி போன்ற ஆழ் நிலையில் உள்ள பல கனிமங்கள் உள்ளிட்ட ஆறு தாதுக்களுக்கான சுரங்கங்களை அமைப்பதற்குத் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
  • முன்னதாக, இந்த அனைத்து 12 அணுக்கரு கனிமங்களுக்கான சுரங்கம் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்