TNPSC Thervupettagam

சுர்ஜாபுரி மற்றும் பஜ்ஜிகா பேச்சுவழக்கு மொழிகள்

October 3 , 2022 657 days 341 0
  • பீகார் மாநில அரசானது, சுர்ஜாபுரி மற்றும் பஜ்ஜிகா பேச்சுவழக்குகளை மேம்படுத்தச் செய்வதற்காக கல்விக் கூடங்களை நிறுவுமாறு அந்த மாநிலக் கல்வித் துறையிடம் ஆணை ஒன்றைப் போட்டுள்ளது.
  • சுர்ஜாபுரி என்பது இந்தி, உருது மற்றும் வங்காளம் ஆகியவற்றின் கலவையாகும்.
  • இது ‘கிஷாங்கஞ்சியா’ என்ற மற்றொருப் பெயராலும் அழைக்கப் படுகிறது.
  • மைதிலி மொழியைப் போலவே பஜ்ஜிகாவும் வடமேற்குப் பீகாரில் அதிகம் பேசப் படுகின்ற ஒரு மொழியாகும்.
  • பஜ்ஜிகா மற்றும் சுர்ஜாபுரிக்கான இரண்டு புதிய கல்விக் கூடங்கள் ஏற்கனவே உள்ள எட்டு மொழிகளுக்கான மையங்களின் வரிசையில் ஒன்றாக நிறுவப்பட்டுள்ளன.
  • பீகாரில் ஏற்கனவே எட்டு மொழிக் கல்விக் கூடங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்