TNPSC Thervupettagam

சுறா இறைச்சி நுகர்வு

January 12 , 2024 190 days 282 0
  • இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் கடலோர மக்கள் நீண்ட காலமாக சுறாக்கள் மற்றும் திருக்கை மீன் இறைச்சிகளை உட்கொண்டு வருகின்றனர்.
  • சுறா மீன்களின் துடுப்புகளை நீக்கி விட்டு மீண்டும் அவற்றை கடலில் தூக்கி எறிதல், அனைத்து வகையான சுறா மற்றும் திருக்கை மீன் இனங்களின் துடுப்புகளை ஏற்றுமதி செய்தல் ஆகிய அனைத்தையும் இந்தியா தடை செய்துள்ளது.
  • எந்தவொரு மீன்பிடி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்தும் பத்து இனங்கள் முற்றிலும் பாதுகாக்கப் படுகின்றன.
  • ஆனால் சட்டப்பூர்வ உள்ளூர் இறைச்சி நுகர்வினால் சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களுக்கான மீன்பிடித்தல் நடவடிக்கை தொடர்கிறது.
  • கோவாவில் சுறா மற்றும் திருக்கை மீன் இறைச்சி விற்பனை செய்யும் உணவகங்கள் அதிகளவில் (35.8 சதவீதம்) உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (34.6 சதவீதம்) மற்றும் மகாராஷ்டிரா (4.6 சதவீதம்) ஆகியவை உள்ளன.
  • இந்தியாவில் சுறா இறைச்சியை விற்பனை செய்யும் அனைத்து உணவகங்களில் 70 சதவிகிதம் ஆனது கோவா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ளன.
  • இந்தியாவின் உணவகங்களில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 251.6 டன் சுறா இறைச்சி விற்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்