சுறாக்கள் குறித்த விழிப்புணர்வுக்கான தினம் - ஜூலை 14
July 22 , 2019 1954 days 620 0
சுறாக்கள் குறித்த விழிப்புணர்வுக்கான தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கருத்துரு: “நெருக்கடியில் இருக்கும் சுறாக்கள் - மத்திய தரைக் கடலுக்கான நடவடிக்கைக்கான அழைப்பு” என்பதாகும்.
இயற்கைக்கான உலக வனவிலங்கு நிதியமானது மத்திய தரைக்கடலில், பாதிக்கும் மேற்பட்ட சுறாக்கள் மற்றும் சுறா இனங்கள் அதிகப்படியான மீன் பிடித்தல் மற்றும் நெகிழி மாசுபாட்டால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என கூறியுள்ளது .
லிபியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகள், இவற்றிற்கு அடுத்த மத்திய தரைக்கடல் மீன் பிடிக்கும் நாடான இத்தாலியை விட மூன்று மடங்கு அதிகமான நெருக்கடி உடைய பகுதியாக உள்ளன எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.