TNPSC Thervupettagam

சுற்றுச்சூழலின் நிலை குறித்த அறிக்கை – 2021

March 1 , 2021 1240 days 686 0
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையமானது (CSE) 2021 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழலின் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது “டவுன் டூ எர்த்” என்ற ஒரு பிரசுரத்துடன் சேர்த்து CSE எனும் மையத்தினால் வருடாந்திரமாக வெளியிடப் படுகின்றது.
  • இது வளங்கள், வனவிலங்கு, வேளாண்மை, ஊரக மேம்பாடு, நீர் மற்றும் துப்புரவு, காலநிலை மாற்றம் போன்ற கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றது.

சிறப்பம்சங்கள்

  • 375 மில்லியன் குழந்தைகள் (புதிதாகப் பிறந்ததிலிருந்து 14 வயது வரை) குறைவான எடை, குறைவான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் குழந்தை இறப்புகள் ஆகியவற்றிலிருந்து நீண்ட காலத் தாக்கங்களைக் கொண்டிருக்கின்றனர்.
  • உலகளவில் பள்ளிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 500 மில்லியன் குழந்தைகளில், இந்தியாவின் பங்களிப்பு 50 சதவிகிதத்திற்கும் மேலானதாகும்.
  • 115 மில்லியனுக்கும் அதிகமான கூடுதலான மக்கள் கடுமையான வறுமையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர், இதில் பெரும்பாலானவர்கள் தெற்கு ஆசியாவில் உள்ளனர்.
  • இந்தியாவின் காற்று, நீர் மற்றும் நிலம் ஆகியவை 2009 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மிகவும் மாசடைந்துள்ளன.
  • மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூர் ஆனது மிகவும் மாசுபட்டுள்ள தொகுப்பாக உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவானது நீடித்த மேம்பாட்டில் மொத்தமுள்ள 192 நாடுகளில் 117வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இது பாகிஸ்தானைத் தவிர அனைத்து தெற்கு ஆசியா நாடுகளுக்கும் பிந்தைய வரிசையில் உள்ளது.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதில் சிறப்பான செயல்பாட்டைப் பதிவு செய்துள்ள 5 மாநிலங்கள் பின்வருமாறு  : கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா.
  • SDG இலக்கை அடைவதில் மிகவும் மோசமான செயல்பாட்டைப் பதிவு செய்துள்ள 5 மாநிலங்கள் பின்வருமாறு : பீகார், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா மற்றும் உத்தரப் பிரதேசம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்